Tuesday, May 14, 2013

தப்பு வேகம்(Escape Velocity)


புவியினது ஈர்ப்புப் புலத்தில் இருந்து உடலொன்றினை தப்ப வைப்பதற்கு வழங்கப்பட வேண்டிய மிகக் குறைந்த வேகம் தப்பு வேகம் எனப்படும்.
R ஆரையையும் M திணிவையும் உடைய கோள் ஒன்றின் மேற்பரப்பில் உள்ள m திணிவுடைய உடல் ஒன்றைக்கருதுக.
இது கோளின் ஈர்ப்புப் புலத்தில் இருந்து தப்ப வைப்பதற்கு வழங்க வேண்டிய மிகக் குறைந்த வேகம் U என்க.

சக்திக்காப்பு விதிப்படி:- 
  • தப்பு வேகம் எறியப்படும் பொருளின் திணிவில் தங்கியிருப்பதில்லை. But அது எந்தக்கோளில் இருந்து எறியப்படுகின்றதோ அக்கோளின் திணிவில் தங்கியிருக்கும்.
  • தப்பு வேகத்தின் பருமன் பொருள் எறியப்படும் கோணத்தில் தங்கியிருப்பதில்லை.
  • பூமியின் மேற்பரப்பில் இருந்தான பொருள் ஒன்றின் தப்பு வேகம் 11.2Km/s  ஆகும்.
  • சந்திரனின் மேற்பரப்பில் தப்பு வேகம்  2.5Km/s. இது எல்லா வாயுக்களினதும் இடை வார்க்கமூலக் கதியிலும் குறைவு. எனவே எல்லா வாயுக்களும் சந்திரனின் ஈர்ப்புப்புலத்திலிருந்து தப்பிவிடும். இதனால் சந்திரனில் வளிமண்டலம் இருக்காது.
                                                                                                                       முன்னைய பதிவுக்கு

No comments:

Post a Comment