Wednesday, May 15, 2013

பூமியினால் ஏற்படுத்தப்படும் ஈர்ப்புல வலிமை



பூமியின் மேற்பரப்பு மையத்தில் இருந்து R தூரத்தில் இருப்பதால் மேற்பரப்பில் ஈர்ப்புப்புலச் செறிவு
பூமியின் மையத்தில் இருந்து ஈர்ப்புப்புல வலிமை தூரத்துடன் கீழ்வரும் வரைபுக்கேற்ப மாறிக்கொண்டு செல்லும்.
                                                                                                                       முன்னைய பதிவுக்கு

ஈர்ப்புப் புலம்(Gravitational Fields)


01. நியுட்டனின் ஈர்ப்பு விதி
02. ஈர்ப்புப்புல வலிமை or ஈர்ப்புப்புலச் செறிவு (g)
03. பூமியின் திணிவும் அடர்த்தியும்
04. பூமியினால் ஏற்படுத்தப்படும் ஈர்ப்புல வலிமை
05. ஈர்ப்புப்புல அழுத்தம் (V)
06. கோள்களும் உபகோள்களும்
07. உபகோள் ஒன்றின் சுற்றற்காலம்
08. உபகோள் ஒன்றினது சக்தி
09. தப்பு வேகம்(Escape Velocity)
10. புவிசார் நிலையான உபகோள்(Parking satellite OR Geostationary)

ஈர்ப்புப்புல அழுத்தம் (V)


முடிவிலியில் இருந்து ஈர்ப்புப் புலத்தில் உள்ள புள்ளி ஒன்றிற்கு ஓரலகு திணிவை புவியீர்ப்பு விசைக்கு எதிராக கொண்டுசெல்ல செய்யப்படும் வேலை அப்புள்ளியில் உள்ள ஈர்ப்புப்புல அழுத்தம் எனப்படும்.
                                                                                                                       முன்னைய பதிவுக்கு

கோள்களும் உபகோள்களும்

கோள்கள்


வானத்தில் உள்ளதும் சூரியனை வலம்வருவதுமான உடல்கள் கோள்கள் எனப்படும்.
இவை 8 வகைப்படும்.
1. புதன்
2. வெள்ளி
3. பூமி
4. செவ்வாய் 
5. வியாழன்
6. சனி
7. யுரேனசு
8. நெப்ரியுன்
உப கோள்கள்
கோள்களை வலம் வருகின்ற உடல்கள் உபகோள்கள் எனப்படும்.

இயற்கையான் உபகோள்கள்
eg:- சந்திரன்

செயற்கையான உபகோள்கள்

eg:- மனிதனால் ஆக்கப்பட்ட செய்மதி
                                                                                                                       முன்னைய பதிவுக்கு

உபகோள் ஒன்றினது சக்தி


பூமியின் மையத்திலிருந்து r ஆரையுடைய வட்டப் பாதையில் உபகோள் பூமியை வலம் வருகின்றது எனக் கொள்க.

உபகோளின் இயக்கசக்தி 

உபகோளின் அழுத்த சக்தி
உபகோளின் அழுத்தசக்தியானது அதனை முடிவிலியில் இருந்து அதன் ஒழுக்குக்கு கொண்டுவருவதற்கு செய்யப்படும் வேலையினால் தரப்படும்.
உபகோளின் மொத்த சக்தி 
  • உபகோள் ஒன்றினது உயரம் அதிகரிக்கும் போது அதன் இயக்க சக்தி குறையும். அழுத்த சக்தி கூடும்.
  • வட்டப்பாதையில் வலம் வரும் உபகோள் ஒன்றினது அழுத்த சக்தி எப்போதும் இயக்கசக்தியிலும் பார்க்க உயரவாக இருக்கம்.
                                                                                                                       முன்னைய பதிவுக்கு

உபகோள் ஒன்றின் சுற்றற்காலம்

பூமியின் மேற்பரப்பில் இருந்து h உயாத்தில் வலம் வரும் உபகோள் ஒன்றின் சுற்றற்காலம்


பூமியின் மேற்பரப்பிற்கு அண்மையாக வலம் வரும் உபகேபள் ஒன்றினது சுற்றற்காலம்
எனவே புவி மேற்பரப்பிற்கு அண்மையில் வலம் வரும் உபகோள் ஒன்றினது அலைவு காலம் 84.6 நிமிடம்
                                                                                                                       முன்னைய பதிவுக்கு

பூமியின் திணிவும் அடர்த்தியும்

திணிவு
பூமியின் திணிவு M எனவும் ஆரை R எனவும் கொள்க. பூமியின் மேற்பரப்பில் m திணிவு வைக்கப்படும் போது,

அடர்த்தி 
Note :-
  • இக்கணிப்புக்களை செய்யும் போது பூமி கோளவடிவானது எனவும் சீரான அடர்த்தியுடையது எனவும் கொள்ளப்பட்டுள்ளது. 
  • பூமியின் மையத்தை நோக்கிச் செல்ல அதன் அடர்த்தி அதிகரிக்கும். மையத்தில் அடரத்தி 10000Kgm-3 ஆகும்.
                                                                                                                       முன்னைய பதிவுக்கு

Tuesday, May 14, 2013

புவிசார் நிலையான உபகோள் - Parking satellite or Geostationary

செயற்கை உபகோள் ஒன்று பூமியைச் சுற்றி 24 மணித்தியால சுற்றல் காலத்துடன் வலம் வருமாயின் பூமியில் உள்ள அவதானி ஒருவருக்கு அவ் உபகோள் ஓய்வில் இருப்பது போல் தோன்றும். இவ் உபகோலள் புவி சார்பான நிலையான உபகோள் எனப்படும்.
Note:-
1) நிலையான புவிசார்பான உபகோள் ஒன்று பூமியின் மேற்பரப்பில் இருந்து
    அண்ணளவாக 36000 Km உயாத்தில் காணப்படும்.
2) புவிசார் நிலையான உபகோளின் ஒழுக்கு வேகம் 3.1Km/s  ஆகும்.
                                                                                                                       முன்னைய பதிவுக்கு

ஈர்ப்புப்புல வலிமை or ஈர்ப்புப்புலச் செறிவு (g)

ஈர்ப்புப்புலம் ஒன்றில் உள்ள புள்ளி ஒன்றில் ஓரலகு திணிவை வைக்கும் போது அதில் தாக்கும் விசை அவ்விடத்தில் உள்ள ஈர்ப்புப்புல வலிமை or ஈர்ப்புப்புலச் செறிவு எனப்படும்.

Note:-
1) G ஆனது இடத்துக்கிடம் வேறுபடாது. ஆனால் g இடத்துக்கிடம் வேறுபடும்.
2) G எண்ணிக்கணியம். ஆனால் g காவிக்கணியம்.
                                                                                                                       முன்னைய பதிவுக்கு

தப்பு வேகம்(Escape Velocity)


புவியினது ஈர்ப்புப் புலத்தில் இருந்து உடலொன்றினை தப்ப வைப்பதற்கு வழங்கப்பட வேண்டிய மிகக் குறைந்த வேகம் தப்பு வேகம் எனப்படும்.
R ஆரையையும் M திணிவையும் உடைய கோள் ஒன்றின் மேற்பரப்பில் உள்ள m திணிவுடைய உடல் ஒன்றைக்கருதுக.
இது கோளின் ஈர்ப்புப் புலத்தில் இருந்து தப்ப வைப்பதற்கு வழங்க வேண்டிய மிகக் குறைந்த வேகம் U என்க.

சக்திக்காப்பு விதிப்படி:- 
  • தப்பு வேகம் எறியப்படும் பொருளின் திணிவில் தங்கியிருப்பதில்லை. But அது எந்தக்கோளில் இருந்து எறியப்படுகின்றதோ அக்கோளின் திணிவில் தங்கியிருக்கும்.
  • தப்பு வேகத்தின் பருமன் பொருள் எறியப்படும் கோணத்தில் தங்கியிருப்பதில்லை.
  • பூமியின் மேற்பரப்பில் இருந்தான பொருள் ஒன்றின் தப்பு வேகம் 11.2Km/s  ஆகும்.
  • சந்திரனின் மேற்பரப்பில் தப்பு வேகம்  2.5Km/s. இது எல்லா வாயுக்களினதும் இடை வார்க்கமூலக் கதியிலும் குறைவு. எனவே எல்லா வாயுக்களும் சந்திரனின் ஈர்ப்புப்புலத்திலிருந்து தப்பிவிடும். இதனால் சந்திரனில் வளிமண்டலம் இருக்காது.
                                                                                                                       முன்னைய பதிவுக்கு

ஈர்ப்புப் புலம் - Gravitational Fields - நியுட்டனின் ஈர்ப்பு விதி

திணிவு காரணமாக ஒரு பொருள் ஆர்முடுகும் வெளி  or ஈர்ப்பு விசையை உணரக் கூடிய பிரதேசம் ஈர்ப்புப் புலம் எனப்படும்.

நியுட்டனின் ஈர்ப்பு விதி
ஈர்ப்புப் புலத்தில் வைக்கப்பட்ட இரு திணிவுகளுக்கிடையே காணப்படும் கவர்ச்சி விசை N ஆனது அத்திணிவுகளின் பெருக்கத்திற்கு நேர்விகித சமனாகவும் திணிவுகளுக்கிடைப்பட்ட தூரத்திற்கு நேர்மாறு விகித சமனாகவும் காணப்படும்.
இங்கு G என்னும் மாறிலி ஈர்ப்பு மாறிலி or அகில ஈர்ப்பு ஒருமை எனப்படும்.
G ஆனது ஒரு மாறாப் பெறுமானம் உடையதாகையால் இதன் பெறுமானம் =
                                                                                                                 முன்னைய பதிவுக்கு

FIELDS - புலங்கள்


ஒரு பொருளை கோலினால் தள்ளுவதற்கும் இழை ஒன்றினால் இழுப்பதற்கும் அப்பொருளுக்கும், இழை or  கோலுக்கும் இடையே தொடுகை ஏற்படுத்தப்பட வேண்டும்.
தொடுகை இல்லாமல் விசை தொழிற்படும் சந்தர்ப்பங்களும் உண்டு.
Eg :-  1) காந்தம் இரும்பாணியைக் கவருதல்.
         2) உரோஞ்சப்பட்ட சீப்பு தூசிகளைக் கவருதல்.
         3) பொருட்கள் பூமியை நோக்கி விழுதல்.
ஒரு வெளியானது விசையைப் பிரயோகிக்கும் தன்மையைக் கொண்டிருக்கு மாயின் அவ்வெளி புலம் எனப்படும்.
புலங்கள் மூன்று வகைப்படும்.
1) ஈர்ப்புப் புலம் (Gravitational Fields)
2) மின் புலம் (Electric Fields)
3) மின்காந்தப் புலம் or காந்தப்புலம் ( Electro Magnetic Fields)