பரிமாணங்கள்(Dimensions)
பௌதீகக் கணியங்களை வேறுபடுத்தி திட்டவட்டமாக விளக்குவதற்குப் பயன்படும் குறியீட்டு ரீதியான கூற்று பரிமாணம் எனப்படும்.
யாதாயினும் ஒரு பௌதீகக் கணியம் சதுர அடைப்புக்குறிக்குள் எழுதப்படு மாயின் அது அக்கணியத்தின் பரிமாணத்தைத் தரும்.
Note:-
1. அலகு அற்ற கணியங்கள் யாவும் பரிமாணமற்றவை.
Eg:- சாரடர்த்தி, சாரீரப்பதன், உராய்வுக்குணகம், தகைப்பு, முறிவுக்குணகம்
2. அலகு உள்ள ஆனால் பரிமாணமற்ற கணியங்களும் காணப்படுகின்றன.
Eg:- தளக்கோணம், திண்மக்கோணம்
பரிமாணத்தின் பிரயோகங்கள்
1. ஒரு பௌதீகக் கணியத்தின் அலகை ஒரு அலகுத் தொகுதியில் இருந்து
இன்னொரு அலகுத்தொகுதிக்கு மாற்றுதல்.
2. ஒரு சமன்பாட்டை செம்மையை வாய்ப்புப் பார்த்தல்
3. ஒரு சமன்பாட்டை பரிமாணமுறையில் நிறுவலாம்.
4. ஒரு சமன்பாட்டில் உள்ள பௌதீகக் கணியத்தின் அலகை அல்லது
பரிமாணத்தைக் கண்டறிய முடியும்.